Sirantha Tamil Quotes (சிறந்த தமிழ் பொன்மொழிகள்) - 3
21. வாழ்க்கையில் உயரிய குறிக்கோளின்றி அங்குமிங்கு்ம் அலைந்துவிட்டுக் கடைசியில் வெற்றாய் முடிவது மனித வாழ்வாகாது. – அஸ்லாமா இக்பால்22. வானம் சுருங்கில் தானம் சுருங்கும் – ஔவையார்23. சீருடன் கச்சிதமாகவும் கண்ணியமாகவும் இருப்பதற்கு பணம் அதிகம் தேவைப்படாது. – மகாத்மா காந்தி24. செல்வங்களின் சுமையை ஏற்றிக் கொண்டு இன்பம் எனும் செங்குத்துப் பாதையில் ஏறிச் செல்வது ஒரு மனிதனுக்குக் கடினம் – முகம்மது நபிகள்25. தேவைக்கு மிஞ்சிய பொருள் வைத்திருப்பவன் பிறர் பொருளைப் பறித்தவன் – புனித அகஸ்தினார்26. பணத்தின் பலன் அனைத்தும் அது பயன்படுவதில்தான் இருக்கிறது – பெஞ்சமின் ஃபிராங்க்ளின்27. பணத்தை உங்கள் தெய்வமாக்கிவிட்டால், அது சைத்தான் போல உங்களை ஆட்டிப் படைக்கும் - ஹென்றி ஃபீல்டிங்28. கடன் வாங்குதல் பிச்சையெடுப்பதைவிடக் கீழானது – லெஸ்ஸிங்29. தேவைக்கு மேலுள்ள பொருள் தேவையில்லாதவற்றை வாங்கவே பயன்படும் - தோரோ 30. விலை குறைந்தது என்ற ஒரே காரணத்திற்காக வேண்டாத பொருள்களை வாங்காதே – ஆஸ்கார் ஒயில்ட்
No comments:
Post a Comment