Showing posts with label Tamil Quotes. Show all posts
Showing posts with label Tamil Quotes. Show all posts

Tuesday, March 18, 2014

தமிழ் பொன்மொழிகள் | Tamil Ponmoligal

தமிழ் பொன்மொழிகள் (Tamil Ponmoligal)

Read the famous quotes (பொன் மொழிகள்) from worlds greatest leaders in tamil language.

  • காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும். - ஷேக்ஸ்பியர்
  • கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது. - பிளேட்டோ
  • அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான். - காந்தியடிகள்
  • நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன. -சுவாமி ராமகிருஷ்ணானந்தர்
  • "நீரை சல்லடையில் கூட அள்ளிவிடலாம் அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருக்க வேண்டும். - யாரோ
  • அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது. - ஓர் அனுபவசாலி
  • நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம். - காந்திஜி
  • ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது. - ஷாம்பர்ட்
  • நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள் - ஓர் அறிஞர்
  • கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பொ¢தும் நாசப்படுத்தி விடும் - கிளெண்டல்
  • இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். - அரவிந்தர்
  • உண்மையிடம் அடைக்கலம் தேடியவன் பலத்தோடும் சுகத்தோடும் இருக்கிறாள் - ஜேம்ஸ் ஆலன்.
  • நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும் - அரவிந்தர்
  • நியாயம், நேர்மை உங்கள் செயல்பாடுகளில் வெளிப்பட மரணத்தின் நினைவோடு வாழ்ந்து வாருங்கள். - லத்தீன்
  • கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன் - ராபர்ட் பிராஸ்ட்
  • என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும் - டொரோதி தெலூஸி
  • நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை - எமர்சன்
  • மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும் - மு.வ.
  • நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது. - ஜான்ஸன்
  • ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும். - வில்லியம் ஹாஸ்விட்
  • உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது. - எமர்சன்
  • அசுத்தங்களுள் மோசமான அசுத்தம் கோபம்தான் - யாரோ
  • துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான் - ஹென்றி லீவ்ஸ்
  • நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நல்ல செயல்கள் நம்மை மெளனமாக்குகின்றன.- பிரான்ஸ்
  • பிரார்த்தனையின் முதல் திறவுகோல் சுத்தமாக இருத்தல்.
  • உலகில் இருவகை குடும்பத்தினரே இருக்கின்றனர். அவர்கள் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள். - போலந்து.
  • மனிதனை மாற்றி அமைக்கும் விதி, அவனது ஒழுக்கமே! - கிரீஸ்



Friday, July 19, 2013

தமிழ்



தமிழ்

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள், நாழிகைக்கு 360(15*24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது. (இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது)

ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம்

ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா?

சம்பந்தம் இருக்கிறது.

இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216(உயிர்மெய்)

சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன. மூச்சை

இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை

உயிருடன் இருக்கலாம். மூச்சின்

விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம்

செய்யாமல் பேசும் ஒரே மொழி

உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!

Monday, July 15, 2013

Swami Vivekanandar Ponmoligal in Tamil | விவேகானந்தர் தமிழ் பொன்மொழிகள்

விவேகானந்தர் தமிழ் பொன்மொழிகள் (Swami Vivekanandar Ponmoligal in Tamil)

"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"

"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!"

"நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்."

"பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!"

"கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்."

"உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி."

"அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு."

"மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்."

"சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை."

"நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன."

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

"உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்."

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன."

Saturday, July 13, 2013

Sirantha Tamil Quotes | சிறந்த தமிழ் பொன்மொழிகள் | Part 4

Sirantha Tamil Quotes (சிறந்த தமிழ் பொன்மொழிகள்) - Part 4

31. சிந்தனை இல்லாத படிப்பு, பயனில்லாத உழைப்பு, படிப்பில்லாத சிந்தனை இவை மூன்றும் ஆபத்தானவை – ஆண்டர்சன்

32. பிறர் குற்றங்களைக் காண முயல்பவன் அரை மனிதன் – வேட்லி

33. நாளை என்பது சோம்பேறிகளின் தினமாகும் – பாபு ராவ்

34. திறமை தானாக வராது; நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும் – ஹேஸ்டர் பீல்

35. தோல்வி என்பது உண்மையை நிலைநாட்ட ஏற்படும் அனுபவம் – பீச்சர்

36. நேர்மையான உழைப்பில் கௌரவம் இருக்கிறது – க்ளீவ் லாண்ட்

37. சுதந்திரமாக இரு. எவரிடமும் இருந்து எதையும் எதிர்பார்க்காதே! - சுவாமி விவேகானந்தர்

38. தொண்டு என்பது அடிமை வேலையன்று. அது தெய்வப் பணியாகும் – திரு.வி.க.

39. மனித வாழ்வு என்பது தாமரை இலையில் உருண்டோடும் பனித்துளி போன்றது – தாகூர்

40. உழைத்துப் போராடாமல் வெற்றியை அடைய முடியாது – தாமஸ்
Previous | Next

Sirantha Tamil Quotes | சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 3

Sirantha Tamil Quotes (சிறந்த தமிழ் பொன்மொழிகள்) - 3

21. வாழ்க்கையில் உயரிய குறிக்கோளின்றி அங்குமிங்கு்ம் அலைந்துவிட்டுக் கடைசியில் வெற்றாய் முடிவது மனித வாழ்வாகாது. – அஸ்லாமா இக்பால்

22. வானம் சுருங்கில் தானம் சுருங்கும் – ஔவையார்

23. சீருடன் கச்சிதமாகவும் கண்ணியமாகவும் இருப்பதற்கு பணம் அதிகம் தேவைப்படாது. – மகாத்மா காந்தி

24. செல்வங்களின் சுமையை ஏற்றிக் கொண்டு இன்பம் எனும் செங்குத்துப் பாதையில் ஏறிச் செல்வது ஒரு மனிதனுக்குக் கடினம் – முகம்மது நபிகள்

25. தேவைக்கு மிஞ்சிய பொருள் வைத்திருப்பவன் பிறர் பொருளைப் பறித்தவன் – புனித அகஸ்தினார்

26. பணத்தின் பலன் அனைத்தும் அது பயன்படுவதில்தான் இருக்கிறது – பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

27. பணத்தை உங்கள் தெய்வமாக்கிவிட்டால், அது சைத்தான் போல உங்களை ஆட்டிப் படைக்கும் - ஹென்றி ஃபீல்டிங்

28. கடன் வாங்குதல் பிச்சையெடுப்பதைவிடக் கீழானது – லெஸ்ஸிங்

29. தேவைக்கு மேலுள்ள பொருள் தேவையில்லாதவற்றை வாங்கவே பயன்படும் - தோரோ 30. விலை குறைந்தது என்ற ஒரே காரணத்திற்காக வேண்டாத பொருள்களை வாங்காதே – ஆஸ்கார் ஒயில்ட்

Friday, July 12, 2013

Sirantha Tamil Quotes | சிறந்த தமிழ் பொன்மொழிகள்

Sirantha Tamil Quotes (சிறந்த தமிழ் பொன்மொழிகள்)

1. பிரார்த்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்! – புத்தர்

2. நிறையப் பேசாதே; நிறைய கேள்! – காந்தியடிகள்

3. ஆழ்ந்த நம்பிக்கை இமயமலை போன்றது. அதை எவராலும் அசைக்க முடியாது! – ஸ்ரீ ராமகிருஷ்ணர்

4. அமைதியை விட மேலான மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை! – அரவிந்தர்

5. கடந்ததைப் பற்றி வருந்தாதே! வருவதைப் பற்றி கற்பனை செய்யாதே! – ஸ்ரீ அன்னை

6. கடுமையாக உழைப்பவனுக்குக் கவலைப்பட நேரமில்லை! – சாணக்கியர்

7. கோபம் அன்பை அழிக்கும். கர்வம் அடக்கத்தைக் கெடுக்கும்! – மகாவீரர்

8. அன்பு இருக்குமிடம் சொர்க்கம்; அன்பு மறைந்த இடம் நரகம்! – திருமூலர்

9. என்னால் இயலாதென்று ஒருநாளுநம் நினையாதே! – விவேகானந்தர்

10. வீணாகாத ஒரே விஷயம் உழைப்பு மட்டுமே! – டால்ஸ்டாய்

Sirantha Tamil Quotes | சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 2

Sirantha Tamil Quotes (சிறந்த தமிழ் பொன்மொழிகள்)
11. நமது வாழ்வை வளமாக்குவது நம்பிக்கைதான்! – நேரு

12. அன்பும் இரக்கமுமே வாழ்க்கையின் அடிப்படை! – வள்ளலார்.

13. நாம் காட்டும் பணிவிற்கும் மரியாதைக்கும் பிரதிபலனாக ஏதேனும் ஒரு நன்மையைப் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்போம் எனில் நம்மிடம் உண்மையான அன்பு உருவாகாது. – விவேகானந்தர்

14. சிறுசிறு செலவுளைப் பற்றிக் கவனமாயிரு. ஒரு சிறு ஓட்டையே பெரிய கப்பலை மூழ்கடித்துவிடும். – பெஞ்சமின் பிராங்கிளின்

15. உலகம் களிமண்ணைப் போன்று மிருதுவானது இல்லை. இரும்பைப் போன்று மிகவும் உறுதியானது. நீ உன் விடாமுயற்சியாலும், கடும் உழைப்பாலும்தான் இந்த உலகத்தில் உனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். – எமர்சன்

16. கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும். – அரிஸ்டாட்டில்

17. ஒரு மனிதன் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலும் மிகமிகச் சிறந்தது, தனக்குத்தானே முற்றிலும் நல்லவனாக இருப்பதுதான். – பிராய்டு

18. பொறாமையினால் ஒருவனின் மனதில் உருவாகும் விஷம் இறுதியில் அவனையே அழித்து விடும். – நியெட்ஸே

19. மன நிறைவுதான் ஒருவனைப் பணக்காரனாக்குகிறது; பேராசைக்காரர்களிடம் இதை எடுத்துச் சொல்லுங்கள். – சாஅதி

20. தன் எடையைப் போல் பத்து மடங்கு அதிக எடையுள்ள தானியத்தை எளிதில் சுமக்கும் எறும்பைப் பார்த்துமா உங்கள் சிந்தனை இன்னும் விழிக்கவில்லை – திரு.வி.க.